சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வங்கிகளில் 78 ஆயிரம் கோடி, காப்பீட்டு நிறுவனங்களில் 14 ஆயிரம் கோடி, நிதி நிறுவனங்களில் மூன்றாயிரம் கோடி என ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி உரிமைகோராமல் உள்ளது.
இந்நிலையில், இந்த பணம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு சொந்தமானது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரண்டாயிரம் கோடிக்கும் அதிகமான நிதி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
















