நீதிபதிகளுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா? தோல்வியடையுமா? - ஓர் அலசல்!
Sep 11, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிபதிகளுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுமா? தோல்வியடையுமா? – ஓர் அலசல்!

Murugesan M by Murugesan M
Dec 10, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மான நோட்டீசை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்இந்தத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா? தோல்வியடையுமா? இதற்கான நடைமுறைகள் என்ன? என்பபற்றிப் பார்ப்போம்.

நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகளை பதவிநீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டம் வழி வகை செய்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இது வரை எந்த ஒரு நீதிபதியும்நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.

இதுவரை எந்த எந்த நீதிபதிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் மூலம் பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை பார்க்கலாம். 1993ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது, ஆனால் தீர்மானம் வெற்றி பெறுவதற்கான போதிய பெரும்பான்மை இல்லாததால் தோற்றுப்போனது. தொடர்ந்து 2011ம் ஆண்டு, கொல்கத்தா உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாக இருந்த செளமித்ர சென் நிதியை கையாடல் செய்ததாக தெரிவித்து அவரை பதவி நீக்க செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் தீர்மானத்தை எடுத்து கொள்வதற்கு முன்பாக அவர், நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதே ஆண்டு சிக்கிம் மாநிலத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பி.டி தினகரன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்காக பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாநிலங்களவையில் நீதிபதிகள் குழு விசாரணைக்கு உத்திரவிடப்பட்ட பின்னர் பி.டி. தினகரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

2015ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.பி.பரிதிவாலாவை பதவி நீக்கம் செய்வதற்கு 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானத்தை கொண்டு வந்தனர்.  இடஒதுக்கீடு குறித்து ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களை தெரிவித்தற்காக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

2017ம் ஆண்டு ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. நாகர்ஜுன ரெட்டியை பதவி நீக்கம் செய்ய மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். குறைந்தளவு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் கைவிடப்பட்டது. 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ர மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் வழக்குகளை பட்டியலிடுவது தொடர்பாக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

இதை தொடர்ந்து, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தனர். மாநிலங்களவை துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, இது நீதிமன்ற நடைமுறை தொடர்பானது என்றும், நீதிபதியின் நடத்தை மீதான குற்றசாட்டுகள் அல்ல என்றும் தெரிவித்து தீர்மானத்தை நிராகரித்துவிட்டார்.

2025ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் இல்லத்தில் எரிந்த பணக்கட்டுகள் எடுக்கப்பட்டதை அடுத்து அவர் மீது பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தனர். பின்னர், நீதிபதிகள் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags: Impeachment motion against judges - will it be taken up? Will it fail?newsNEWS TODAYtoday newsTn news
Share
Tweet
SendShare
Previous Post

உரிமை கோராமல் இருந்த சுமார் ரூ.2000 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – கோவை செம்மொழி பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவதாக அறிவிப்பு!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies