@forest - Tamil Janam TV

Tag: @forest

இது எப்படி சாத்தியம் வாயடைத்துப் போன விஞ்ஞானிகள் – 5 நாட்களில் 5000 கிலோ மீட்டர் பறந்த அமூர் பருந்துகள்.. சிறப்பு தொகுப்பு

அமூர் ஃபால்கன்... 150 முதல் 200 கிராம் எடையுள்ள மிகச் சிறிய அமூர் பருந்துகள்தான் இந்த சாதனைக்கு சொந்தமானவை.... இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மூன்று அமூர் பருந்துகளை தேர்வு செய்த விஞ்ஞானிகள், அவற்றின் கண்டம் விட்டு கண்டம் செல்லும் திறனை, பாணியை கண்காணிக்க, அப்பறவைகளின் உடலில் செயற்கைக்கோள் கருவிகளை பொருத்தினர்... அவற்றின் செயல்பாட்டை கண்டு வியந்தே போனார்கள் விஞ்ஞானிகள்.... இந்தியாவில் இருந்து 5 நாட்களில் 5000 கிலோ மீட்டர்களை கடந்து ஆப்பிரிக்காவை அடைந்திருந்தன அந்தப் பறவைகள்... அமூர் பருந்துகள் மிருகத்தனமாக சக்தியை மட்டும் பயன்படுத்தாமல், வளிமண்டல இயற்பியலை நேர்த்தியாக பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தியிருந்ததைக் கண்டு விஞ்ஞானிகள் வாயடைத்து போயினர்... 150 முதல் 200 கிராம் எடையுள்ள இந்தப் பறவைகள், இந்திய நிலப்பரப்பைக் கடந்து, அரபிக் கடலைக் கடந்து, ஆப்பிரிக்காவின் குளிர்கால நிலங்களில் கால் பதித்துள்ளன... செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து புறப்படும் அமுர் பருந்துகள் ஒரு வாரத்திற்குள் ஐந்தாயிரம் முதல் 6000 கிலோ மீட்டர்களை கடந்து கிழக்கு ஆப்பிரிக்காவை ...

நீலகிரியில் வனக்குற்றங்களை தடுக்கும் விதமாக தீவிர வாகன சோதனை!

நீலகிரியில் அதிகரித்துவரும் வனக்குற்றங்களை தடுக்கும் விதமாக பைக்காரா பகுதியில் வனத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை ஒன்றிணைக்கும் ...

 சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!

 சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நாடு முழுவதும் 130 நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார். தேசிய, மாநில மற்றும் ...

காட்டுத் தீயால் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி சேதம்!

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் சேதமடைந்துள்ளன. கடும் வெயில் காரணமாக, பெரியகுளத்தை அடுத்துள்ள ...

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில்  ...

யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அவருக்கு மசினக்குடியைச் சேர்ந்த சிறுமி “பேட் ஆஃப் மசினகுடி” என்கிற புத்தகத்தை வழங்கினார். குடியரசுத் ...