madras high court - Tamil Janam TV

Tag: madras high court

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர், முன்னாள் தலைமை செயலாளர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர். பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு ...

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் – பொது நல வழக்கு தாக்கல்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ...

அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில்  கூட்டு பிராத்தனை ...

அதிமுக உட்கட்சி வழக்கில் வரும் 21-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ...

மன்னிப்பு கேட்டால் முன்ஜாமின் – யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவு கொட்டிய வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் அவரது தாயாரிடம் மன்னிப்பு கேட்டால் முன் ஜாமீன் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...

நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2024-ல் ...

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ...

வாழப்பாடி அருகே அனுமதி இல்லாமல் கருணாநிதி சிலை – காவல்துறை விசாரணை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அனுமதி இல்லாமல் வைத்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது இடங்களில் உள்ள கட்சி ...

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் செயல்பட, இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பாலியல் வன்கொடுமை ...

சிறுவன் கடத்தல் வழக்கு – ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி!

காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் ...

திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் ...

இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என கைதி வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமம்னறம் உத்தரவு!

இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் ...

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் ...

மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!

மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. நீட் ...

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ...

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரான நிலையில், முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 17 வயது ...

உரிமை கோரப்படாத இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

உரிமை கோரப்படாத இறந்த நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறந்துபோன அடையாளம் தெரியாத ...

தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ள தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு துறைகளில் பணியாற்றிவர்களின் ...

புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கப்படவில்லை – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என  சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் ...

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு ...

காவல் நிலைய கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவதன் ரகசியம் என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் உள்ள காவல் நிலையத்தின் கழிவறைகள் கைதிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் ...

ரவுடி நாகேந்திரனின் சகோதரர் முருகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

புழல் சிறை வார்டனால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ரவுடி நாகேந்திரனின் சகோதரர் முருகனுக்கு, உரிய சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் ...

டாஸ்மாக் வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக்கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி சென்னை ...

சாதியை காரணம் காட்டி, கோயில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையே – சென்னை உயர் நீதிமன்றம்

சாதியை காரணம் காட்டி, கோயில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவம் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வரர் கோயிலில் ...

Page 2 of 9 1 2 3 9