அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR-ஐ கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், FIR இணையதளத்தில் தானாகவே லாக் ஆகி இருக்கும் என்றும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நேரத்தில் பதிவிறக்கம் செய்திருக்கலாம் என தெரிவித்தார்.
FIR-ஐ கசியவிடுவது மிகப்பெரிய குற்றம் என்றும், ஞானசேகரனால் பாதிக்கப்பட்டதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
ஞானசேகரன் மீது சென்னையில் திருட்டு போன்ற குற்றங்களில் 20 வழக்குகள் உள்ளதாகவும், ஆனால் ஞானசேகரன் மீது பாலியல் வழக்குகள் எதுவும் இல்லை என்றும் அருண் கூறினார்.