பலூன் கற்றுத் தந்த பாடம்
Oct 16, 2025, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

பலூன் கற்றுத் தந்த பாடம்

தொழிலின் அடிப்படை நெளிவு சுளிவுகளைப்  பலூனிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்- இராம்குமார் சிங்காரம்

Web Desk by Web Desk
Jul 14, 2023, 09:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில் தொடங்க விரும்பும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது பலூன் தத்துவம். தொழிலின் அடிப்படை நெளிவு சுளிவுகளைப்  பலூனிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

ஊதப்படாத பலூன் விரலிடுக்கில் அடங்கிவிடும். நமது தொழில்  ஐடியாக்களும் தொடக்கத்தில் அப்படிதான்.பலூன், காற்று நிரப்பப்பட்ட பிறகு பெரிய வடிவத்தைப் பெறுவதுபோல நாம் பணத்தை முதலீடு செய்து அச்சிந்தனைக்கு ஒரு பெரிய வடிவும் கொடுக்கும்போது அது பிறரை ஈர்க்கத் தொடங்கும்.

பலூனில் நிரப்பப்படும் காற்றுக்கேற்ப அதன் அளவு அடுத்தடுத்த நிலைகளை எட்டிக் கொண்டே இருக்கும். அது போல உழைப்பையும், பணத்தையும் முதலீடு செய்து கொண்டே இருந்தால், அடுத்தடுத்த நிலைக்குச்  சென்று கொண்டே  இருக்கலாம்.

பலூன் பறக்க வேண்டுமானால் அதற்கு உள்புறம் மட்டுமல்லாது வெளிப்புறமும் நல்ல காற்றோட்டம் அவசியம். காற்றின் வேகத்தைப் பொறுத்தே பலூனின் பயணம் இருக்கும். அதுபோல நாம் என்னதான் அழகாக தொழிலுக்கான உத்தியை வகுத்தாலும் கூட பொதுமக்களிடம் அதற்கான தேவை இல்லாவிட்டால், தொழிலை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது.

நாம் விழிப்பாக இல்லாவிட்டால் காற்றின் வேகத்தில் பலூன் கையை விட்டுப் பறந்து செல்வது, தொழிலுக்கும் பொருந்தும். பலூனானது வளைந்து செல்லும் தன்மை கொண்டது. தன் பாதையில் ஏதேனும் மரமோ பாறையோ, சுவரோ தென்பட்டால், அதில் முட்டி மோதி உடனடியாக வேறு பாதையில் திரும்பி செல்லும். நம்முடைய தொழிலில் வகுத்துள்ள  உத்திகளுக்குத்  தடை  ஏற்படுகின்றபோது நாமும் உடனடியாக சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டே அடுத்தகட்ட இலக்கை வகுத்து பயணத்தை தொடர வேண்டும்.

ஏதேனும் ஒரு சின்ன குண்டூசி குத்தினாலும் கூட பலூன் வெடித்துவிடும். இங்கே குண்டூசி போலத் தான் நிறுவனத்தின் நற்பெயரும் அது கலங்கப் பட்டுபோனால், மீண்டும் தூக்கி நிறுத்துவது மிகக் கடினம்.

தொழிலில் பணத்தை தேவையின்றி அதிக முதலீடு செய்து கொண்டே போவது, பலூனில் காற்றை ஊதிக்கொண்டே இருப்பது போன்றது. அளவான முதலீடும் முக்கியம்.

ஒர் அளவுக்குக் காற்றை நிரப்பிவிட்டு வெளியே வீசுகிற காற்றுக்கேற்ப நாம் கொஞ்சம் கொஞ்சமாக நூலை விட்டால் பலூன் உயர உயரப் பறந்து கொண்டே இருக்கும். அதுபோல தேவைப்படும் அளவு பணத்தை முதலீடு செய்து தொழிலுக்கான வரவேற்பு மக்களிடத்தில் இருக்கின்ற பட்சத்தில் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டே இருந்தால் தொழில் வெற்றி பெறும்.

தொழில் தொடங்குவதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்பதை அடுத்தடுத்து நீங்களே சோதித்துக் கொள்ள முடியும். பயணத்தை ஆரம்பிப்போம், வாருங்கள்.

என்ன தொழில் தொடங்குவது.. தொழிலை தொடங்க என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்..?

·      தெரிந்த தொழிலாக இருப்பதால்

·      நன்கு தொழில் தெரிந்த ஒருவர் உடன் இருப்பதால்

·      மிகப் பிரகாசமான எதிர்காலம் கொண்ட ஒரு தொழிலைப் பற்றிய விவரங்கள் கையில் இருப்பதால்

·      ரொக்கமாக நிறைய பணம் வைத்திருப்பதால்

இதைத்தாண்டி, தொழில் தொடங்க விரும்பும் பலருக்கும் எழும் கேள்வி,  என்ன தொழில் தொடங்குவது..?

பொதுவாக பலரும் தொழில் ஆலோசகர்களிடம் அடிக்கடி கேட்கும் முதல் கேள்வியும் இதுதான்.

எனக்கு தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால், என்ன தொழிலில் ஈடுபடுவது என்று தெரியவில்லை. இப்போதுள்ள சூழலில் எந்தத் தொழில் நல்ல லாபம் தருகிறது?”

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் எல்லோரும் அதிலேயே ஈடுபட்டுவிட மாட்டார்களா..? என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். நுகர்வோர் பொருட்கள் விற்பனையில் தான் அதிக லாபம் இருக்கிறது என்று தெரிந்தால், தெருவுக்கு தெரு சூப்பர் மார்க்கெட்டுகளாகத்  தொடங்கிவிடுவார்களே… இன்றைய தேவை என்னவென்று பார்க்கும் அதே நேரம் நமக்கு அந்தத் தொழில் சரிப்பட்டு வருமா என்று பார்க்க வேண்டும்.  அதை எப்படி கண்டுபிடிப்பது?

அதற்கு சிம்பிளாக ஒரு வழி இருக்கிறது. பேப்பரையும், பேனாவையும் கையில் எடுங்கள். உங்களுக்கு தெரிந்த தொழில்களை எல்லாம் வரிசையாக எழுதிக் கொண்டே வாருங்கள்… இப்படி நீளலாம்…

·      உணவகம்

·      மொபைல் சர்வீஸ் கடை

·      ஆப்டிக்கல்ஸ்

·      ஐஸ் கிரீம் பார்லர்

·      நகலகம்

·      கூரியர் சர்வீஸ்

·      ரியல் எஸ்டேட்

·      சேவைத் தொழில்

·      பள்ளிகளுக்கான பொருள் விற்பனையகம்

·      பதிப்பகம்

·      டியூஷன் நிலையம்

 

இப்படி நீளும் பட்டியலில் குறைந்தது 100 தொழில்களையாவது பட்டியலிட முடியும்.  நமது ஆர்வம் எந்தத் தொழிலில் இருக்கிறதோ அது முதல் 10 இடங்களுக்குள் வந்து விடுவதையும் நீங்கள் கவனிக்கலாம். இவ்வளவு தொழில்கள் நம்மிடையே இருக்கின்றபோது இவற்றையெல்லாம் நம்மைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கானோர் மேற்கொண்டு வெற்றி பெறுகின்றபோது, உங்களுக்கும் வணிக உலகில் ஒரு இடம் நிச்சயம் இருக்காதா…  என்ன?

சரி… ஒருவேளை உங்களுக்கு பட்டியல் போடுவதில் சிரமம் இருக்கிறதா…? இந்தக் கோணத்தில் யோசித்துப் பாருங்கள்.

காலையில் இருந்து எந்தெந்தப் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள்… அதை வரிசைப்படுத்துங்கள்.

பேஸ்ட், பால்,  தண்ணீர்,  டீத்தூள்,  பேப்பர், கேபிள், சோப், துண்டு, ஊதுபக்தி, சாப்பாடு, டிபன் பாக்ஸ், காலணி, வாகனம், தலைக்கவசம், என்று நம்மை அறியாமலே நூற்றுக்கணக்கான பொருட்கள் நம் பயன்பாட்டில் இருப்பதையும் அவற்றுக்காக நாம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவு செய்வதையும் புரிந்துகொள்ள முடியும்.

இந்த செலவுப் பட்டியலை வைத்து ஆராய்ந்தால், அங்கெல்லாம் யாரோ ஒருவர் உங்களிடமிருந்து பணம் சம்பாதிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியவரும். ஒருவரது செலவு, மற்றவரது வருமானம் என்பதுதான் வியாபாரத்தின் அடிப்படை.

அதாவது, நீங்கள் செலவழிக்கிற ஒவ்வொரு இடத்திலும் யாராவது ஒருவர் லாபம் சம்பாதிக்கிறார் அல்லவா? அப்படியானால் அவையெல்லாம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ள தொழில்கள் தானே.. தலைமுடி வெட்டுவதில் தொடங்கி காலணி விற்பது வரை… எந்தத் தொழிலாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

உங்கள் பட்டியலில் சிறிய தொழில், பெரிய தொழில் என்றெல்லாம் பேதம் பார்க்கத் தேவையில்லை.

மேலும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் செய்யும் தொழில்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் ஊரை ஒரு சுற்று சுற்றி வந்து, கண்ணில் பட்ட தொழில்களை எல்லாம் பட்டியலிடுங்கள். உங்கள் பட்டியல் 500 ஐ தொட்டுவிடும்.

டெலிபோன் டைரக்டரி, இன்டர்நெட் போன்றவற்றில் மூலம் தேடினால், சுமாராக 1,000 தொழில்களுக்கு மேல் சுலபமாக பட்டியலிட முடியும்.

இந்தத் தொழில்களில் முதல்கட்டமாக உங்கள் ரசனைக்கேற்ற 20 தொழில்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். காரணம் மனதுக்குப் பிடித்த தொழிலில்தான் உங்களால் சாதிக்க முடியும். அடுத்து அதிலிருந்து உங்கள் முதலீட்டுக்கு ஏற்ற நிச்சய லாபம் வரும் என்று நீங்கள் நம்பும் 10 தொழில்களைத் தேடுங்கள். இதில் உங்களுக்கு நன்கு அறிமுகமான, அத்தொழிலில் நெளிவு, சுழிவுகள் தெரிந்த ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பது வெகு சுலபமாக இருப்பதை காண்பீர்கள்.

தொழிலதிபர் கனவு வரும் போதே, சட்டென நமக்கு வந்து நிற்கும் யோசனை நாம் இத்தனை காலமாக செய்து வரும் வேலையை தொழிலாக மாற்றுவது தான் பாரத மின் மிகு நிலையத்தில் பணிபுரிபவர் அப்படி ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பது உடனடியாக சாத்தியமில்லை. ஆனால், அந்நிறுவனத்திற்கு தேவையான உபரி பொருட்களை சப்ளை செய்ய முடியுமே!

 

ShareTweetSendShare
Previous Post

அவமானம்-அது வருமானம்!

Next Post

  ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல சுலபமா..?  

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies