அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினரால் 13 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அமைச்சர் பொன்முடியின் வீடு, அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம சிகாமணியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். பொன்முடியை அவரது இல்லத்தில் வைத்தபடியே சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மேல் விசாரணைக்காக சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்றனர். அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.70 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் என் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி மகனும், திமுக எம்பியுமான கௌதம சிகாமணியையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது