போர்ட் பிளேரில் ரூ710 கோடி மதிப்பில்
அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த வீர சாவர்க்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இவ்விழாவில் மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்கிறார்.