சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட 7 மணிநேர விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
நேற்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன், வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணி முதல் இரவு வரை அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
நேற்று இரவு எட்டு மணி முதல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. நேற்று இரவு தொடங்கிய விசாரணை நள்ளிரவு 3 மணி அளவில் நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மற்றும் சென்னை இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை காலை 7:00 மணி முதல் நடைபெற்று, 19 மணி நேரத்துக்கு பிறகு நிறைவடைந்தது.
இந்நிலையில் மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்க துறையில் ஆஜராகும்படி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.