தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்- பிரதமர் நரேந்திர மோடி
Oct 4, 2025, 12:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்- பிரதமர் நரேந்திர மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர், வரும் 2024 லோக்சபா தேர்தலில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டுகளை பெறுவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Jul 19, 2023, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுடில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இந்தக் கூட்டணி உருவாகி, 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வாஜ்பாய், அத்வானியால் உருவான இந்தக் கூட்டணியை, பிரகாஷ் சிங் பாதல், பாலசாகேப் தாக்கரே, அஜித் சிங், சரத் யாதவ் போன்ற தலைவர்கள் மெருகேற்றினர்.

நம் நாட்டில் கூட்டணி அமைப்பது பாரம்பரியமாக உள்ளது. ஆனால், எதிர்மறையான நோக்கத்துடன் உருவாக்கப்படும் கூட்டணி வெற்றி பெற்றதில்லை. கடந்த 1990களில் நாட்டை ஸ்தம்பிக்க வைக்க, அரசுகளை உருவாக்கவும், கவிழ்ப்பதற்காகவும் காங்கிரஸ் அமைத்த கூட்டணி தோல்வி அடைந்தது.

அதே நேரத்தில், 2014க்கு முன் அமைக்கப்பட்ட காங்கிரஸ் கூட்டணி அரசு, முழு ஆட்சிக்காலம் பதவியில் இருந்தது. ஆனால், கொள்கைகள் முடங்கின; அரசு நிர்வாகம் ஸ்தம்பித்தது. பிரதமருக்கு மேல் ஓர் அதிகார மையம் இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்டாயத்தால் உருவான கூட்டணியல்ல; பங்களிப்பை உணர்த்தும் கூட்டணி. கூட்டணியின் சிறந்த பங்களிப்பில், இதில் உள்ள அனைவருக்கும் பெருமை உண்டு.

இந்தக் கூட்டணியானது, பல்வேறு மாநிலங்களின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய, அழகான வானவில் போன்றது. மற்ற எல்லாவற்றையும்விட, நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கே எப்போதும் முக்கியத்துவம் தருகிறது. எந்தவொரு கட்சிக்கு எதிராகவும் இந்த கூட்டணி அமைக்கப்படவில்லை; நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக உருவாக்கப்பட்டது.

மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா ஆகியோர் போதித்த சமூக நீதியின் பாதையில், இந்தக் கூட்டணி பயணித்து வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி தன்னை அர்ப்பணித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியானது,  இந்திய மக்களை ஒற்றுமைப் படுத்துகிறது; ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி, மக்களை பிளவுபடுத்துகிறது. நாங்கள் நிகழ்காலத்துக்காக மட்டும் பணியாற்றுவதில்லை; சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் பாடுபடுகிறோம். கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் வரை, அரசு நிர்வாகத்தில், அரசு அலுவலகங்களில் சுதந்திரமாக சுற்றி வந்த தரகர்களை துாக்கி எறிந்துள்ளோம்.

அரசியலில் போட்டிகள் இருக்கலாம்; பகைமை இருக்கக் கூடாது. ஆனால், எதிர்க்கட்சிகள், நமக்கு எதிராக அவதுாறான கருத்துகளைத் தெரிவிப்பதுடன், நம்மை வீழ்த்த நினைக்கின்றன. எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தபோதும், பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதையும், முலாயம் சிங், சரத் யாதவ் ஆகியோருக்கு பத்ம விருதுகளை வழங்கி இந்தக் கூட்டணி அரசு அழகு பார்த்தது.

சுயநல அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கலாம்; ஆனால், இணைந்திருக்க முடியாது. மக்களின் அறிவுத்திறன் குறித்து எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிட்டுள்ளன. எதற்காக இந்தக் கட்சிகள் தற்போது கூட்டணி அமைத்துள்ளன என்பது மக்களுக்கு தெரியும்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்.
வரும் 2024 லோக்சபா தேர்தலில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டுகளை பெறுவோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர். இந்த மக்கள் சக்தியை, உலக நாடுகளும் அறிந்துள்ளன. இந்தக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன என்பது மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உரையாற்றினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒரு நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த உள்ளது- பிரதமர் மோடி

Next Post

நேரடி வரி வசூலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நான்காம் இடம் பிடித்துள்ளது

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

தனியார் பல் மருத்துவமனை சேதம் – நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை – சிறப்பு புலனாய்வு குழுவில் 2 எஸ்பிக்கள் சேர்ப்பு!

ஓசூரில் கனமழை – தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோன கள்ளக்குறிச்சிக்கு சென்றீர்களா? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க ரஷ்யா திட்டம்!

கந்தன் மலை திரைப்பட இசை வெளியீட்டு விழா – ஹெச்.ராஜா, கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டிக்கர் ஒட்டும் பணியால் பணிச்சுமை அதிகரிப்பு – டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

சென்னை கிழக்கு கடற்கரை இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு!

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் சினிமா பாடல்!

நாமக்கல் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் – தள்ளிச்சென்ற பொதுமக்கள்!

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies