நாளை தொடங்கும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 17 அமர்வுகளில் மொத்தம் 28 மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட உள்ளன.
நாளை டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி ஆகஸ்ட் பதினோராம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 21 புதிய மசோதா தாக்கல், 7 பழைய மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில், லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் மொத்தம் 17 அமர்வுகளாக இக்கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.