தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறையினர் 17ம் தேதி அன்று சோதனை மேற்கொண்டனர்.
சென்னை சாஸ்திரி பவானில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரிடம் இரண்டு நாட்களாக சுமார் 13 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அமலாக்கத்துறை சோதனையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் 13 இலட்சம் வெளி நாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது, ரூ. 81.7லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டது, வங்கி கணக்கில் உள்ள ரூ.41.9 கோடி நிரந்தர வைப்பு தொகை அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று முடக்கப்பட்டது.
நேற்று நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக இன்று காலை முதல் கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணியிடம் விசாரணை நடந்து வருகிறது.