சந்திரயான் -3 விண்கலத்தை புவியின் 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டது என இஸ்ரோ தெறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
Chandrayaan-3 Mission:
The mission is on schedule.The third orbit-raising maneuver (Earth-bound perigee firing) is performed successfully from ISTRAC/ISRO, Bengaluru.
The next firing is planned for July 20, 2023, between 2 and 3 pm IST.
— ISRO (@isro) July 18, 2023
சந்திரயான் -3 விண்கலத்தை ஜூலை 17-ம் தேதியன்று 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சந்திரயான் -3 விண்கலத்தை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுபாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.