உலகிற்கு மிகத் திறமையான தொழிலாளர்களை அதிகம் வழங்கும் நாடாக இந்தியா உள்ளது -பிரதமர் நரேந்திர மோடி 
Aug 14, 2025, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகிற்கு மிகத் திறமையான தொழிலாளர்களை அதிகம் வழங்கும் நாடாக இந்தியா உள்ளது -பிரதமர் நரேந்திர மோடி 

திறன், மறுதிறன் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை எதிர்கால தொழிலாளர்களின் தாரக மந்திரங்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Jul 21, 2023, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற ஜி20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் மாநாட்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி,

வேலைவாய்ப்பு மிக முக்கியமான பொருளாதார மற்றும் சமூக காரணிகளில் ஒன்றாகும், வேலைவாய்ப்புத் துறையில் சில மிகப்பெரிய மாற்றங்களின் நுழைவாயிலில் உலகம் உள்ளது என்று கூறினார். இந்த விரைவான மாற்றங்களை நிவர்த்தி செய்ய பதிலளிக்கக்கூடிய மற்றும் பயனுள்ள உத்திகளைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நான்காவது தொழிற்புரட்சியின் இந்த சகாப்தத்தில், தொழில்நுட்பம் வேலைவாய்ப்பிற்கான முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளதுடன், தொடர்ந்து நிலைத்திருக்கும்.
கடந்த அத்தகைய தொழில்நுட்பம் தலைமையிலான மாற்றத்தின் போது எண்ணற்ற தொழில்நுட்ப வேலைகளை உருவாக்குவதில் இந்தியாவின் திறனை அவர் எடுத்துரைத்தார்.

மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களை திறமையாக்குவதை வலியுறுத்தினார், திறன், மறுதிறன் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை எதிர்கால தொழிலாளர்களின் தாரக மந்திரங்கள் என்று கூறினார்.
இதை நனவாக்கும் இந்தியாவின் திறன் இந்தியா இயக்கத்தில் இதுவரை 12.5 மில்லியனுக்கும் அதிகமான இந்திய இளைஞர்களுக்கு பயிற்சியளித்த ‘பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம்’ ஆகியவற்றை சுட்டி காட்டினார். “செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், இணையம் சார்ந்த சாதனங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற தொழில்துறை 4.0 துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என கூறினார்.

கொரோனா காலத்தில் இந்தியாவின் முன்கள சுகாதாரப் பணியாளர்களின் திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். இது இந்தியாவின் சேவை மற்றும் இரக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது என்றார். இந்தியா உலகின் மிகப்பெரிய திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் நாடுகளில் ஒன்றாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், உலகளவில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் பணியாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் ஒரு யதார்த்தமாக இருக்கும் என்றார்.

திறன்களின் வளர்ச்சி மற்றும் பகிர்வை உலகமயமாக்குவதில் ஜி20 அமைப்பின் பங்கை அவர் வலியுறுத்தினார். திறன்கள் மற்றும் தகுதித் தேவைகளின் அடிப்படையில் தொழில்களை சர்வதேச அளவில் அங்கீகரிக்கும் உறுப்பு நாடுகளின் முன்முயற்சிகளை பாராட்டினார்.
இதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் புலம்பெயர்வு இயக்க கூட்டுமுயற்சிகளின் புதிய மாதிரிகள் தேவை என்று கூறினார். முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், தகவல்கள் மற்றும் தரவுகளை பகிர்ந்து கொள்ள அவர் பரிந்துரைத்தார். இது உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு சிறந்த திறன், தொழிலாளர் திட்டமிடல் மற்றும் இலாபகரமான வேலைவாய்ப்புக்கான ஆதார அடிப்படையிலான கொள்கைகளை உருவாக்க அதிகாரம் அளிக்கும்.

பெருந்தொற்றின் போது மீள்திறனின் தூணாக உருவெடுத்துள்ள செயலி சார்ந்த நிரந்தரமற்ற மற்றும் பகுதிநேர வேலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அடங்கிய பொருளாதாரத்தில், புதிய வகை தொழிலாளர்களின் பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இது நெகிழ்தன்மை வாய்ந்த வேலைகளை வழங்குவதுடன் வருமான ஆதாரங்களையும் பூர்த்தி செய்கிறது என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக இளைஞர்களுக்கு இலாபகரமான வேலைவாய்ப்பை உருவாக்கும் மகத்தான ஆற்றலை இது கொண்டிருக்கும் அதே நேரத்தில், பெண்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு மாற்றகரமான கருவியாகவும் மாறும் என்று அவர் கூறினார். அதன் திறனை உணர்ந்து, இந்த புதிய தலைமுறை தொழிலாளர்களுக்கான புதிய கால கொள்கைகள் மற்றும் தலையீடுகளை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
வழக்கமான வேலைக்கான வாய்ப்புகளை உருவாக்க நிலையான தீர்வுகளைக் கண்டறியவும், சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய மாதிரிகளைக் கொண்டு வரவும் அவர் பரிந்துரைத்தார். கிட்டத்தட்ட 280 மில்லியன் பதிவுகளைக் கண்டுள்ள இந்தியாவின் ‘இ ஷ்ரம் தளம் குறித்து விளக்கியவர், இது தொழிலாளர்களுக்கான இலக்கு தலையீடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். வேலையின் தன்மை நாடுகடந்ததாக மாறியுள்ளதால் நாடுகள் இதேபோன்ற தீர்வுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவது 2030 நிகழ்ச்சி நிரலின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தாலும், சர்வதேச அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்போதைய கட்டமைப்பானது, சில குறுகிய வழிகளில் கட்டமைக்கப்பட்ட நன்மைகளை மட்டுமே கணக்கிடுகிறது, அதே நேரத்தில் பிற வடிவங்களில் வழங்கப்படும் பல நன்மைகள் இந்த கட்டமைப்பின் கீழ் வராது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் சமூகப் பாதுகாப்பு குறித்த சரியான நிலையைப் புரிந்துகொள்வதற்கு, உலகளாவிய பொது சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற பயன்கள் கணக்கிடப்பட வேண்டும் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஒவ்வொரு நாட்டின் தனித்துவமான பொருளாதார திறன், பலம் மற்றும் சவால்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததுடன்,  அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவு என்ற அணுகுமுறை சமூகப் பாதுகாப்பிற்கான நிலையான நிதியளிப்புக்கு ஏற்றதல்ல.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் உரையாற்றினார்.

Tags: primeminister modiPM Modi
ShareTweetSendShare
Previous Post

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Next Post

வேலைவாய்ப்பு திருவிழா மூலம்  அரசு துறைகளில்  70,000 க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை  நாளை பிரதமர் மோடி வழங்குகிறார்

Related News

இமாச்சல பிரதேசம் : வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

டெல்லி : தலைநகரில் வெளுத்து வாங்கி வரும் கனமழை!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies