வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒடிசா கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. மேலும் மேற்கு திசையில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (21.07.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் நீலகிரி மற்றும் கோவையில் உள்ள மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.