துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு ஊழியர்கள் தவறாக பாடியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியொன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு ஊழியர்கள் தவறாக பாடினர்.
முதல்முறையாக பாடும்போது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்பதை ‘திருநாடும் என்கிற வார்த்தையை விட்டுவிட்டு பாடினார்கள்.
இதற்கு அடுத்ததாக ‘கண்டமிதில்’ என்பதற்கு பதில் கண்டமதில் என்று தவறாக பாடினர்.
2-வது முறையாக மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியபோதும், ‘புகழ்மணக்க’ என்பதை ‘திகழ் மணக்க’ என்று தவறாக பாடியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது சர்ச்சையான நிலையில் அரசு இணையதளத்திலிருந்து நேரலை லிங்க் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.