சேலத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில், கூலித் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி, மாணவர்கள் குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில், அழகாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருமூர்த்தி, நேசமணி, சிவராமகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், வலசையூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மலையப்பன், பூபதி கண்ணன், மாரியப்பன் ஆகியோரும் கைதாகி உள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.