வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தல் அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேல் சித்தூரில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றதால் தான் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை பெற்றதாக கூறினார். மக்களை சந்திப்பது போல் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நாடகமாடி வருவதாக தெரிவித்தார்.
மன்னராட்சி முறையை திமுக மீண்டும் கொண்டு வந்துள்ளதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, வாரிசு அரசியலுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் முடிவு கட்டப்படும் என கூறினார்.