தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள பலகாரங்கள் தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தீபாவளி விற்பனைக்காக குடோன்களில் வைத்து இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாநகரில் உள்ள குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது ஊழியர்கள் கையுறைகள் இல்லாமலும், முகக்கவசங்கள் இல்லாமலும் பலகாரங்கள் தயாரிப்பது தெரியவந்தது. அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருண் பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவுப் பொருட்களை விற்பனை செய்ய அறிவுறுத்தினார்.