ஊழலில் திளைத்தவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்துள்ளனர்- குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் குற்றச்சாட்டு
Jul 25, 2025, 06:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஊழலில் திளைத்தவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்துள்ளனர்- குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் குற்றச்சாட்டு

தேசிய கல்விக் கொள்கை -2020 அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவததோடு, கற்றலின் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Jul 24, 2023, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று நடைபெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ் தங்கர்,

கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக செயல்முறையின் இயல்பான பகுதி எனவும், ஆனால் “கருத்து வேறுபாட்டை பகைமையாக மாற்றுவது ஜனநாயகத்திற்கு சாபக்கேடு என்றும் கூறினார். ‘எதிர்ப்பு’ என்பது ‘பழிவாங்கல்’ ஆக மாறிவிடக் கூடாது என்று எச்சரித்த அவர், பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி என்றும் பரிந்துரைத்தார்.

ஜனநாயகம் என்பது உரையாடல், விவாதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் இடையூறு என்பது ஜனநாயகத்தின் மதிப்புகளுக்கு எதிரானது என்றும் கூறினார். “மக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய ஜனநாயகத்தில், குழப்பங்கள் ஆயுதமாக்கப்பட்டுள்ளது” என்றும் தனது வேதனையையும், கவலையையும் வெளிப்படுத்தினார்.

ஜனநாயக விழுமியங்களின் சாராம்சத்தைப் பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் அனைவரும் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்த அவர், ஒவ்வொரு நொடியும் நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்குவதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது என்று சுட்டிக் காட்டினார்.
இதற்கு நாட்டு மக்கள் பெரும் விலை கொடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், “ஒரு குறிப்பிட்ட நாளில் நாடாளுமன்றத்தில் இடையூறு ஏற்படும்போது, கேள்வி நேரம் இருக்க முடியாது. கேள்வி நேரம் என்பது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கான ஒரு செயல் முறை. ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பெரும் நன்மை கிடைக்கும். ஜனநாயகத்தின் மாண்புகள் மற்றும் நல்லாட்சியின் அடிப்படையில் சிந்திக்கும்போது கேள்வி நேரம் இல்லாததை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது” என்றார்.

‘பலவீனமான ஐந்து’ பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்த இந்தியா, இன்று உலகின் ‘முதல் ஐந்து’ பொருளாதாரங்களில் ஒன்றாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், இந்தியாவின் வளர்ச்சியுடன், சவால்களும் உள்ளதாகக் கூறினார். “உங்கள் முன்னேற்றம் அனைவருக்கும் பிடிக்காது. உங்களின் வளர்ச்சியை களங்கப்படுத்துவதற்காக தீய சக்திகள் உள்ளன” என்று கூறினார். அத்தகைய சக்திகளை தடுக்க வேண்டுமெனவும் இளைஞர்களை வலியுறுத்தினார்.

சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு எதிரான கதைகளை உருவாக்கும் இடங்களாக மாறிவிட்டன. அத்தகைய நிறுவனங்கள் நமது மாணவர்களையும், ஆசிரியர்களையும் தங்கள் குறுகிய நோக்கத்தத்திற்காகப் பயன்படுத்துவதாக எச்சரித்த அவர், இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாளும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

“இந்தியாவுக்கு எதிரான கதைகளை அழிக்க வேண்டும் என்று மாணவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.

வெளிப்படைத்தன்மையிலும், பொறுப்புக் கூறலிலும் தற்போதைய அரசு கவனம் செலுத்துவதாகக் கூறினார். ஊழல், இடைத்தரகர்களுக்கு இன்று இடமில்லை என்றார். “ஊழலில் திளைத்தவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். ஊழல் என்பது சமமான வளர்ச்சி மற்றும் சம வாய்ப்புகளுக்கு எதிரானது, சட்டத்தை மீறுபவர்கள் தப்பிக்கும் வழிகள் அனைத்தும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன என்பதைக் எண்ணும்போது ஆறுதலாக உள்ளது என்று கூறினார்.

தேசிய கல்விக் கொள்கை -2020 அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவததோடு, கற்றலின் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாகப் பாராட்டினார், இந்த கல்விக் கொள்கை பெரிய மாற்றத்திற்கு ஊக்கமளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: Vice president of india
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு- டிஜிட்டல் சாதனங்கள் முக்கிய ஆவணங்கள் செல்போன்கள் சிம்கார்டுகள் பறிமுதல்

Next Post

மணிப்பூர் விவகாரம் எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கடும் அமளி- இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

2020-ம் ஆண்டுக்கு பின்னர் 22 செயற்கைக் கோள்களை செலுத்தி இஸ்ரோ சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies