மணிப்பூர் காணொளி விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடியின பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தில், சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த மே மாதம் மணிப்பூரில் இரு பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை காணொளி, தற்போது வெளியாகி நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து மணிப்பூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூர் காணொளி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.