அதிக நேரம் மக்களுடன் செலவிடுங்கள்: எம்.பி.க்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை!
Mar 15, 2026, 10:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிக நேரம் மக்களுடன் செலவிடுங்கள்: எம்.பி.க்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை!

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்களது தொகுதிகளுக்குச் சென்று மக்களிடம் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருக்கிறார்.

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்,  பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை 11 குழுக்களாக பிரித்து சந்தித்து வருகிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. அதன்படி, இன்று உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தேர்தல் வியூகங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாடிய பிரதமர் மோடி, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று மக்களிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும். குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று, மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக் கூற வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சுயநலத்தால் உருவானது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி தியாகத்தால் உருவானது. இதனால் சில இடங்களில்  ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்தது. பீகாரில் நிதீஷ்குமாருடன் கூட்டணி வைத்தோம். அவரது கட்சியை விட அதிக சட்டமன்ற உறுப்பினர்களை நாம் வைத்திருந்தோம். ஆனாலும், அவருக்கே முதல்வர் பதவியைக் கொடுத்தோம். ஆனால், கூட்டணியை முறித்துக் கொண்டு, எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து விட்டார். அதேபோல, பஞ்சாப்பில் அகாலிதளம் கட்சியின் ஆட்சியில், அக்கட்சியைவிட நாம்  அதிக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தோம். எனினும், துணை முதல்வர் பதவி கேட்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இதிலிருந்தே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தியாகம் புரியும்.” இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags: feature
ShareTweetSendShare
Previous Post

நிலவை நெருங்கும் சந்திராயன் -3

Next Post

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆகஸ்ட்-10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதில்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies