சந்திரயான்-3 விண்கலம் புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்து நள்ளிரவு ஆக 1- ம் தேதி 12.05 முதல் நிலவின் சுற்றுப்பாதைக்குள், பயணிக்கத் தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராய, சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி இந்த விண்கலம்
விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 26 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது.
Chandrayaan-3 Mission:
Chandrayaan-3 completes its orbits around the Earth and heads towards the Moon.A successful perigee-firing performed at ISTRAC, ISRO has injected the spacecraft into the translunar orbit.
Next stop: the Moon 🌖
As it arrives at the moon, the… pic.twitter.com/myofWitqdi
— ISRO (@isro) July 31, 2023
இந்நிலையில் இன்று பெங்களூரில் உள்ள இஸ்ரோ மைய கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து, நள்ளிரவு 12.05ல் இருந்து 1 மணி வரை நிலவை நோக்கிய பயணத்துக்கான பணிகள் நடந்துமுடிந்ததாகவும், சந்திரயான்- 3 விண்கலத்தில் உள்ள த்ரஸ்டர்களில் உந்து விசை ஏற்படுத்தப்பட்டதை அடுத்து அது நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருகிறது. நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான் நுழைய 28 முதல் 31 நிமிடங்கள் எடுத்துக் கொண்டுள்ளது. சரியான பாதையில் எதிர்பார்க்கப்பட்டதைவிட மேலும் கூடுதலான வேகத்தில் நிலாவை நோக்கி சந்திரயான்-3 சென்று கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படவுள்ளது.