“என் மண் என் தேசம்” புதிய இயக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு!
Sep 1, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“என் மண் என் தேசம்” புதிய இயக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Aug 2, 2023, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, என் மண் என் தேசம் என்கிற புதிய இயக்கம் தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்கிற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி, கடந்த 30-ம் தேதி நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதை நாம் சுதந்திர பெருவிழாவாக கொண்டாடி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15-ம் தேதி மேலும் ஒரு புதிய இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த இயக்கம் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக ‘என் மண், எண் தேசம்’ என்று அழைக்கப்படும்.

இந்த இயக்கத்தின் மூலம், நாடு முழுவதும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும், அமுத கலச யாத்திரை நடத்தப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 7,500 சிறிய அளவிலான கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, யாத்திரை டெல்லியை வந்தடையும். இந்த கலசங்களுடன் மரக்கன்றுகளும், செடிகளும் எடுத்து வரப்பட்டு, கலசங்களில் உள்ள மண் டெல்லி தேசிய போர் நினைவிடத்துக்கு அருகே கொட்டப்பட்டு, மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படும். பின்னர், அந்த இடத்தில் அமுத பூங்காவனம் அமைக்கப்படும்.
இது ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் அடையாளமாக இருக்கும்.

அதேபோல, தேசத்தை வளர்ந்த நாடாக்கும் இலக்கு, அடிமைத்தனத்தை வேரறுப்பது, பாரம்பரிய பெருமிதம், ஒற்றுமையின் பலம், கடமையை நிறைவேற்றுதல் உள்ளிட்ட அடுத்த 25 ஆண்டுகளுக்கான 5 உறுதிமொழிகள் குறித்து கடந்த சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பேசினேன். இதை ‘என் மண், என் தேசம்’ இயக்கத்தில் பங்கேற்கும் அனைவரும் சபதமாக ஏற்க வேண்டும். தேசத்தின் புனித மண்ணை கைகளில் ஏந்தி சபதம் ஏற்கும்போது செல்ஃபி புகைப்படம் எடுத்து yuva.gov.in இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், கடந்தாண்டு சுதந்திர தினத்தை போலவே நிகழாண்டும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள். இந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும். இதன் மூலம், நமது கடமைகளை உணர்ந்து நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவு கூற முடியும். சுதந்திரத்தின் மதிப்பையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பிரிஜ் பூஷன் சிங் மீதான புகார்-வழக்கை முடிக்க சிறுமி சம்மதம்   

Next Post

சர்வதேச போதைப் பொருள் மாஃபியாக்கள் கைது: என்.சி.பி.க்கு அமித்ஷா வாழ்த்து!

Related News

நாட்டின் பாதுகாப்பு திறனை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!

ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

புதுச்சேரி : ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி ரூ.206 கோடி மோசடி!

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பசுக்களை கொல்லக் கூடாது என்பது நபிகள் நாயகத்தின் கூற்று : நடிகர்  சல்மான் கான்

லீக்ஸ் கோப்பை  கால்பந்து இறுதி போட்டி : சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த இண்டர் மியாமி அணி!

ஆப்கானிஸ்தானில் 8 முறை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியாவில் தீவிரமடைந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டம்!

புதுக்கோட்டை : குறுக்கே வந்த நாய் – கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆழியார் அணை காட்சி முனையம்!

கரூர் : மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies