சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மாஃபியாக்கள் 2 பேர் உட்பட 22 பேரை கைது செய்த்தோடு, போதைப் பொருள்களுக்கு எதிரான மிகப்பெரிய ஒடுக்குமுறையில் ஈடுபட்ட போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது பாரத பிரதமர் மோடியின் கனவு. ஆகவே, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் அனைத்து நிறுவனங்களின் வழிகாட்டுதலின் கீழும் போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் திசையில் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் டெல்லி மண்டல பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும் எல்.எஸ்.டி. என்படும் 2 மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தலை என்.சி.பி. முறியடித்திருக்கிறது. மேலும், போதைப் பொருள் இறக்குமதி மற்றும் பான் இந்தியா விநியோகத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்திருக்கிறது. தவிர, குற்றவாளிகளிடமிருந்து 29,013 எல்.எஸ்.டி. பிளாட்ஸ், 472 கிராம் போதை பவுடர் மற்றும் 51.38 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறது.
In a major crackdown on the narcotics trade, the NCB busted 2 international drug cartels operating through the darknet and arrested 22 individuals with a huge cache of 29,103 blots of deadly LSD in the last 3 months.
The breakthrough achieved in pursuing PM @narendramodi Ji's…
— Amit Shah (@AmitShah) August 1, 2023
இந்த சூழலில்தான், போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அமித்ஷா வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “போதைப் பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. போதைப் பொருளுக்கு எதிராக போராடும் அனைத்து நிறுவனங்களின் மன உறுதியையும் இது உயர்த்தும். போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்னதான் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அவர்கள் எங்கள் ஏஜென்ஸிகளின் பிடியில் இருந்து தப்ப முடியாது”என்று தெரிவித்திருக்கிறார்.
இத்தகவலை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்திருக்கிறது