அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம்- அமலாக்கத்துறை வாதம்
Mar 18, 2026, 03:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம்- அமலாக்கத்துறை வாதம்

தாக்கப்பட்டதாக சொன்னாரே, எங்கே காயம்? செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 2, 2023, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம் என்றும், தாக்கப்பட்டதாகச் சொன்னாரே, காயத்தை காட்டவில்லையே என்றும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி வாதத்தை முன்வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2011 – 16 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் இருவருக்கும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

இதன் பிறகு, செந்தில் பாலாஜி, அவரது தம்பி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் கடந்த மாதம் 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, மறுநாள் அதிகாலை செந்தில் பாலாஜியை கைது செய்து, அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால், தனக்கு நெஞ்சு வலிப்பாக அவர் கூறவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், சிகிச்சை முடிந்து தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நேற்று நிறைவடைந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, 15 நாட்களுக்கு மேல் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், தற்போதுதான் அவர் உடல் நலம் தேறிவருவதால் அவரிடம் சிறிது நேரம் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க, இன்று ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டிருந்தது அமலாக்கத்துறை, அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜி விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்தார். இடையூறுகளை ஏற்படுத்தினார். தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலேயே அவர் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் தற்போது விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை. எனவே, அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள இந்த காலகட்டத்தை முதல் 15 நாட்களாக உச்சநீதிமன்றம் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறியிருக்கும் நிலையில், நீதிபதிகளிடம் காயத்தை காண்பிக்கவில்லை, ஆகவே, செந்தில் பாலாஜியிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துவது மிக மிக அவசியம்” என்று வாதிட்டார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவரும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளருமான வீரா. சாமிநாதனின், கொங்கு நகரிலுள்ள வீட்டிலும், முத்துப்பட்டியிலுள்ள தோட்டத்து வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறார்கள். இவர், பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மாமூல் வசூலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ஹரியானா கலவரம்: செய்திக்கு பின்னால்..!

Next Post

புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஊழல் புகார்- சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Related News

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

அடுத்த 3 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும் – புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உறுதி!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் – மத்திய அரசு விளக்கம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies