தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தமிழக வனத்துறை கண்காட்சி அரங்கில் உண்ணிக் குச்சி யானைகள் இடம்பெற்றிருந்தன. இந்த யானைகள் கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா வளாகத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் வனத்துறை சார்பிலும் ஓர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கையொட்டி உண்ணிக் குச்சிகளால் உருவாக்கப்பட்ட பெரிய யானை ஒன்றும், குட்டி யானை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு நிஜ யானைகளைப் போன்றே மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த யானைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
நேற்று நடைபெற்ற இந்த விழாவுக்கு வருகை தந்த அனைவரும் இந்த யானைகளுடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.