ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, அவரால் இனி 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
2018 – 2022 காலகட்டத்தில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அரசு முறையாக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டார். அப்போது அவருக்கு வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்களிடம் இருந்து பெறப்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை விற்று பணத்தை அபகரித்து மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டார்.