யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்!
Jul 27, 2025, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதிகளை சந்தித்து பாராட்டுத் தெரிவித்தார்.

Web Desk by Web Desk
Aug 6, 2023, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அவருக்கு மசினக்குடியைச் சேர்ந்த சிறுமி “பேட் ஆஃப் மசினகுடி” என்கிற புத்தகத்தை வழங்கினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழகத்திற்கு  3 நாள் பயணம் வந்துள்ளார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் மைசூர் வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினக்குடி சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்பு அளித்தனர். பின்னர், கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் சென்றார். அங்கு, தி எலிபென்ட் விஸ்பர்ஸ் ஆவணப்படத்திற்க்காக ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து, பரிசுகளை வழங்கினார்.

பின்னர், முகாமிலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கினார். பிறகு, அங்கிருந்து காரில் புறப்பட்டு மசினகுடி பஜார் அருகே வந்தபோது திடீரென காரிலிருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்து கைக்குலுக்கினார். அப்போது, அனன்யா விஷ்வேஷ் என்ற சிறுமி, குடியரசுத் தலைவருக்கு தான் எழுதிய “பேட் ஆஃப் மசினகுடி” என்ற புத்தகத்தை வழங்கினார். அச்சிறுமிக்கு சாக்லெட் வழங்கிய குடியரசுத் தலைவர், அங்கிருந்த மற்ற சிறுவர் சிறுமிகளுக்கும் சாக்லேட் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விட்டர் பதிவில், “யானைகளை பாதுகாக்க வேண்டியது நமது தேசிய பொறுப்பு. இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் பழங்குடி சமூகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த சமூகங்களுக்கு தங்களது அரசியலமைப்பு உரிமைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags: forest elephant campmudumalai tiger reservenilgiris tnnBomman bellipresident visit to mudumalaipresident murmubomman and belli@forest
ShareTweetSendShare
Previous Post

நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது சந்திராயன் – 3!

Next Post

ஞானவாபி மசூதியில் 3-வது நாளாக தொடரும் தொல்லியல் ஆய்வு!

Related News

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies