நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் – 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. இதன் மூலம், நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா சாதனை படைத்திருக்கிறது.
நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008-ம் ஆண்டு சந்திராயன் -1 விண்கலத்தையும், 2019-ம் ஆண்டு சந்திராயன் – 2 விண்கலத்தையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியது. எல்லா நாடுகளும் நிலவின் வடதுருவ பகுதியில் ஆய்வு நடத்தி வரும் நிலையில், தென்துருவத்தை ஆராய இந்தியா சந்திரயான் -2-ஐ அனுப்பியது. ஆனால், நிலவில் தரையிறங்கியபோது தரையிறங்கும் கருவி வேகமாக தரை இறங்கியதால் சேதம் அடைந்து கட்டுப்பாட்டை இழந்தது.
இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் இடைவிடாத முயற்சியின் பலனாக மீண்டும் சந்திரயான் -3 விண்கலத்தை உருவாக்கி கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பியது. இதுதான் இன்று வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்திருக்கிறது. இதன் மூலம் திட்டமிட்டபடி, வரும் 23-ம் தேதி சந்திரயான் -3 விண்கலம் நிலவில் கால் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chandrayaan-3 Mission:
“MOX, ISTRAC, this is Chandrayaan-3. I am feeling lunar gravity 🌖”
🙂Chandrayaan-3 has been successfully inserted into the lunar orbit.
A retro-burning at the Perilune was commanded from the Mission Operations Complex (MOX), ISTRAC, Bengaluru.
The next… pic.twitter.com/6T5acwiEGb
— ISRO (@isro) August 5, 2023