நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை மக்களவை அலுவல்கள் தொடங்கியதும் மணிப்பூர் விவகாரம், அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறி எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்காத பிரதமருக்கு எதிராக, எதிர்கட்சியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் கௌரவ் கோகோய் பேசி வருகிறார்.
முன்னதாக ராகுல் காந்தியின் ஏன் பேசவில்லை என நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பினார்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி வரும் 10 ஆம் தேதி பதிலளிக்கிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.