1993ம் ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி சென்னை சேத்துபட்டு எம்.வி நாயுடு தெருவில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட மிக சக்தி வாய்ந்த
ஆர்.டி.எக்ஸ் வெடி குண்டு வெடித்ததில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களாகிய 11 தேசியவாதிகள் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் தேசபக்தர்களுமான
ராமசுப்பிரமண்யம், சேஷாத்ரி, குமரிபாலன், பிரேம்குமார், மேகலா, லலிதா, தேசிகன், ராமகிருஷ்ண ரெட்டி, காசிநாதன், ராஜேந்திரன் மற்றும் ரவீந்திரன் உள்ளிட்டோர் இஸ்லாமிய தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட மிக சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வெடி குண்டுக்கு உயிர்த் தியாகம் செய்தனர்.
அவர்களின் உயிர்த் தியாகத்தை நினைவுக் கூர்ந்து போற்றும் வகையில் இன்று ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.