தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது - பாஜக தொண்டர்கள் கண்டனம்
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது – பாஜக தொண்டர்கள் கண்டனம்

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 8, 2023, 07:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 பாஜக அலுவலகங்களைக் கடந்த மார்ச் 10ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக புதிய அலுவலகத்தில் கூடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், . அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரத மாதா சிலையை நிறுவும் பணிகள் நடைபெற்று வந்தன.

வருகின்ற ஆகஸ்ட் 9,10,11 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களில் விருதுநகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை “என் மண், என் மக்கள்” பாத யாத்திரையும் நடைபெற உள்ளது.

இதையடுத்து, விருதுநகர் வட்டாசியர் மற்றும் கோட்டாச்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினருடன் வந்து அனுமதி பெறாமல் பாரத மாதா சிலையை வைத்துள்ளீர்கள்.

எனவே உடனடியாக பாரத மாதா சிலையை அகற்ற வேண்டும் என்றனர். எங்கள் பட்டா நிலத்தில் தான் உள்ளது, சிலையை அகற்ற முடியாது என்று பாஜகவினர் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாஜக மாநில செயலாளரும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன்.பாலகணபதி சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சிலையை மூடி வைப்பது என்றும், நாளை முறைப்படி அனுமதி கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டு சிலை துணியால் மூடப்பட்டது.

விருதுநகர் வட்டாசியர் மற்றும் கோட்டாச்சியர் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் இரவு 12 மணிக்கு மேல் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக புதிய அலுவலகத்தில் பாஜக அலுவலக வாசலில் உள்ள இரும்புக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த காவல்துறையினர், நவீன இயந்திரம் கொண்டு சுமை தூக்கும் தொழிலாளர்களைக் மூலம் பாரத மாதா சிலையை அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றி வட்டாச்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர்.

இது குறித்து பாஜக தொண்டர்கள், அண்ணாமலை நடைபயணத்தை தடுக்க திமுக தூண்டுதலின் பேரில் இவ்வாறு வருவாய் துறையும், காவல் துறையும் செயல்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் தங்கள் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைப் பயணத்தை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது. இந்த அத்துமீறலுக்கெல்லாம் காவல்துறை பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை இந்த ஊழல் திமுக ஆட்சியில் உள்ளது என்று கூறினார்கள்.

Tags: bjppoliceViruthunagar BJPBJP OfficeViruthunagar BJP OfficeViruthunagar police
Share
Tweet
SendShare
Previous Post

அரை இறுதியில் வெற்றி… இறுதிப் போட்டியில் சிக்ஸர்: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

Next Post

சென்னை ஆர்எஸ்எஸ் தியாகிகள் தினம் இன்று..

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies