அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் புயல் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள், தேசிய உயிரியல் பூங்கா, நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. புயல் – கனமழை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
மத்திய – அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல் காரணமாக , அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களான தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உள்பட 10 மாகாணங்களை புயல் தாக்கியது.
புயலை தொடர்ந்து வீசும் பலத்த காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
இது தொடர்பாக தேசிய வானிலை மையம் கூறியதாவது, சூறாவளி, ஆலங்கட்டி மழை, மின்னல் உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த புயல் தாக்குதலில் முக்கிய பகுதியாக வாஷிங்டன் – பால்டி மோர் பிராந்தியம் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக விமானச் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. நியூயார்க் வாஷிங்டன், பில்டெல்பியா அட்லாண்டா, பால்டிமோர் விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதை நிறுத்தி வைக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.
2600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 7,700 விமானங்கள் தாமதமாக வந்ததாக தெரியவந்தது. புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.