தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
Sep 9, 2026, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 9, 2023, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, தேர்தல் வியூகங்கள் வகுப்பது குறித்து நாடு முழுவதுமுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கிய இக்கூட்டம் இன்றுடன் நிறைவடைந்தது.

நேற்று மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முதலில் நடந்த கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களைச் சேர்ந்த 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுடன் அதிக நேரத்தைச் செலவிட்டு நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை பொது மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.  மத்திய அரசின் செயல்பாடுகள், சாதனைகள், திட்டங்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகளவில் மக்களைச் சென்றடையும் வகையில் பரப்ப வேண்டும். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஊழல், வாரிசு அரசியல் குறித்து பொதுமக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

இன்று மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன், டையூ ஆகிய மாநிலங்களின் எம்.பி.க்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பகவத் கராட் மனோஜ் கோட்டாக் அர்ஜூன் ராம் மெக்வால், கைலாஷ் சத்யார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags: ModimumbaiModi NDA meetingNDA meeting
Share
Tweet
SendShare
Previous Post

வீடு தோறும் மூவர்ணக் கொடியேற்ற அஞ்சலங்களில் தேசிய கொடி கிடைக்கும்

Next Post

கனமழை காரணமாக அமெரிக்காவில் விமானச் சேவை பாதிப்பு

Related News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies