நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் மூவண்ணக்கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். 76-வது சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, இந்திய அரசு “இல்லம் தோறும் மூவர்ணம் 2.0” பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொடிகளை விற்பனை செய்வற்கு அஞ்சல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை நகர மண்டலத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் 4.50 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அஞ்சல் நிலையங்களில் 01.08.2023 முதல் கொடி விற்பனை தொடங்கியுள்ளது. அஞ்சல் நிலையங்கள் மூலம் விற்கப்படும் ஒரு கொடியின் விலை ரூ.25/- கொடியின் பரிமாணம் 30” x 20” ஆகும். சென்னை நகர மண்டலத்தின் கீழ் உள்ள 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 547 துணை அஞ்சல் நிலையங்கள் மற்றும் 1625 கிளை அஞ்சல் நிலையங்களிலும் கொடிகள் விற்பனைக்கு உள்ளை.
கடந்த 2022 ஆம் ஆண்டில், சென்னை நகர மண்டலத்தில் மொத்தம் 2,79,282 கொடிகள் விற்பனை செய்யப்பட்டன. கொடிகளைச் சில்லரையாகவும் அல்லது மொத்தமாகவும் வாங்க, பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.epostoffice.gov.in என்ற வலைதளத்தின் மூலமும் கொடிகளை வாங்கலாம்.