இந்தியாவை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு இருக்கிறதா? ரவிசங்கர் பிரசாத் எம்.பி. அதிரடி கேள்வி!
Oct 14, 2025, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு இருக்கிறதா? ரவிசங்கர் பிரசாத் எம்.பி. அதிரடி கேள்வி!

Web Desk by Web Desk
Aug 9, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு இருக்கிறதா? என்பதை காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத், “வாரிசு அரசியல் என்பது இயல்பாகவே ஜனநாயகத்துக்கு விரோதமானது மற்றும் பொறுப்பற்றது. வாரிசு அரசியல் என்பது என்னவென்றால், ஒரு தலைவர் மறைந்து விட்டால் அவருக்குப் பிறகு அவரது மகனோ அல்லது மகளோ அக்கட்சியின் தலைவராக வருவார்கள். கட்சியின் தலைவராக மட்டும் இருந்து விட்டால் பரவாயில்லை. அதன் பிறகு, அவர்கள் தங்களது தகுதியையும், திறமையையும் பொருட்படுத்தாமல் மாநில முதல்வர் வேட்பாளராகவோ அல்லது பிரதமர் வேட்பாளராகவோ போட்டிக்கு வருவார்கள்.

அந்த வகையில்தான், தற்போது ராகுல் காந்தியும் பிரதமர் வேட்பாளருக்கு போட்டி போடுகிறார். இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழி நடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு இருக்கிறதா என்பதைக் காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் வாரிசு அரசியல் நிலைதான் நிலவுகிறது. தங்களது தகுதியையும், திறமையையும் பற்றி துளியும் சிந்திக்காமல் முதல்வர் வேட்பாளருக்கும், பிரதமர் வேட்பாளருக்கும் ஆசைப்படுகிறார்கள்.

முதலில், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டுமானால், வாரிசு அரசியல் மற்றும் ஊழல் ஆகிய நோய்கள் விலக வேண்டும். இதைத்தான் முக்கியப் பிரச்சாரமாக பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். “பரிவார் க்விட் இந்தியா” என்பது தான் அது. அதாவது, “துர்நாற்றம் வீசும் ஊழல் அரசியல் வெள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு,” “வாரிசு அரசியலே இந்தியாவை விட்டு வெளியேறு” என்பதுதான் பிரதமரின் முக்கிய பிரசாரமாகும்” என ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.

Tags: rahul gandhiRavi Shankar PrasadRavi Shankar Prasad MPDynasty Politics
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

Next Post

திமுகவின் முடியாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – அண்ணாமலை சூளுரை

Related News

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை – பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

ரோந்து காவல் வாகனம் மீது மோதிய திமுக பிரமுகரின் சொகுசு கார்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.40000 வரை விலையுயர்ந்த விமான டிக்கெட் – பயணிகள் அதிர்ச்சி!

நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த பாக். பிரதமர் – மெலோனி ரியாக்சன் வைரல்!

ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

யார் இந்த அஜய் ரஸ்தோகி?

ஐயப்பன் கோயில் தங்க கவசம் வழக்கு : சென்னையில் கேரள போலீசார் விசாரணை!

தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஆனந்த்!

இந்தியா சிறந்த நாடு : பிரதமர் மோடி சிறந்த நண்பர் – டிரம்ப் புகழாரம்!

சீனா : பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்!

அனைவரும் ஒன்றுபட வேண்டும் : ஜி.கே.மணி பேட்டி!

இந்தியாவுக்கு சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies