திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்கள் அகற்றப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்கள் அகற்றப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக திருவண்ணாமலைக்குச்  சென்றிருக்கிறார். தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து நேற்று திருவண்ணாமலைக்கு  வந்த ஆளுநருக்கு  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் புத்தகம் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, கிரிவலப் பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, “பாரத நாடு என்பது மற்ற நாடுகளைப் போல ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, சாதுக்கள், ரிஷிகளின் தவ வலிமையினால் உருவாக்கப்பட்டது. சனாதன தர்மம் என்பது தனி ஒருவருக்கானது அல்ல. பாரத நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவானது. நான், எனது என்றில்லாமல் நாம், நமது என்பது தான் சனாதனம். சமீபகாலமாக சனாதனம் அழிவுகளைச் சந்தித்து வருகிறது.

பாரத நாடு 1947-ம் ஆண்டுதான் உருவானதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால், பாரத நாடு எப்போதோ உருவாகி விட்டது. சுதந்திரம் மட்டுமே 1947-ல் பெற்றோம். தமிழகத்தில் ஏராளமான இடங்களை நான் சுற்றிப் பார்த்திருக்கிறேன். அந்த அடிப்படையில் சொல்கிறேன், பாரத நாட்டின் ஆன்மிகத் தலைநகரம் தமிழ்நாடுதான். இதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

அதேபோல, திருவண்ணாமலை மிகப்பெரிய ஆன்மிக பூமி. இங்கு கிரிவலப் பாதையில் அசைவ உணவுக் கடைகள் இருப்பதைக் கண்டேன். அசைவ உணவு சாப்பிட விரும்புவர்கள் எங்கு வேண்டுமானாலும் போய் சாப்பிடலாம். அதற்குக் கிரிவலப் பாதை உகந்த இடமில்லை. ஆகவே, கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவுக் கடைகளை  அகற்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து, சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கியவர், பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள வள்ளலார் ஆசிரமத்தில் தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சார்பில் நடந்த விவசாயிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, அரங்கில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்டிருந்த விளைபொருட்களைப் பார்வையிட்டார். பிறகு, தனது குடும்பத்தினருடன் இரமணாஸ்ரமம் மற்றும் யோகி ராம்சுரத் ஆசிரமத்தில் தரிசனம் செய்தார்.

ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;

Next Post

“இந்திய” இனி “பாரதிய” : பெயர் மாறும் சட்டங்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies