கடந்த ஆண்டு பாரதம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாட்டு மக்களை வீட்டில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடவேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்தர மோடி வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்களும் தங்கள் வீடுகளில் மூவண்ணக் கொடியேற்றி கொண்டாடினார்கள்
அதே போல இந்த ஆண்டும், பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்கள் அனைவரும் தத்தம் வீடுகளில், அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்ற வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதனால் அஞ்சல் அலுவலகத்தில் தேசியக் கொடி விற்பனை தொடங்கியது.
தற்போது அதனைக் குறிக்கும் வகையில் டெல்லி பிரகதி மைதான சாலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்டோர் தலைமையில் தேசிய கொடி ஏந்தி இருசக்கரப் பேரணி நடத்தினர். பேரணியை துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
केंद्रीय पर्यटन, संस्कृति एवं पूर्वोत्तर क्षेत्र विकास मंत्री श्री जी.किशन रेड्डी ने दिल्ली में #HarGharTiranga अभियान के प्रति जागरूकता फैलाने के लिए आयोजित बाइक रैली में भाग लेते हुए अपना संदेश दिया। (1/2)#AmritMahotsav #MainBharatHoon pic.twitter.com/5ae7gI9k4n
— Amrit Mahotsav (@AmritMahotsav) August 11, 2023
இந்த நிகழ்ச்சி பற்றி கிஷன் ரெட்டி கூறியதாவது,
‘ பாரதப் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுச் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் தேசிய உணர்வுடன் தேசியக் கொடியை ஏற்ற உள்ளனர் உள்ளனர். அவர்களுக்கு நினைவூட்டும் நிகழ்வாக இந்த நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று ஒவ்வொரு குடிமகனும் ஏதேனும் ஒரு வகையில் தேசிய கொடியை ஏந்த வேண்டும். இது ஒவ்வொருவரின் கடமையாகும். தேசியக் கொடியை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் நீங்கள் பெற்று கொள்ளலாம்.’ என்று தெரிவித்தார்.