01.08.2023 நிலவரப்படி, மொத்தம் 59,524 கி.மீ தொலைவிலான அகல இரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என இரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
இரயில்களை விரைவுபடுத்துவது என்பது இந்திய இரயில்வேயில் (ஐ.ஆர்) ஒரு தொடர்ச்சியான முயற்சி மற்றும் தொடர்ச்சியான செயல்முறையாகும்.
மும்பை ஐ.ஐ.டியின் உதவியுடன் அறிவியல் பூர்வமாக இந்திய இரயில்வே மேற்கொண்ட நேர அட்டவணை சீரமைப்பு மூலம், பயணிகள் இரயில்களை எக்ஸ்பிரஸ் சேவைகளாகவும், எக்ஸ்பிரஸ் சேவைகளை சூப்பர்பாஸ்ட் சேவைகளாகவும் மாற்றுவதால் இரயில் சேவைகளை விரைவுபடுத்த முடியும்.
வழக்கமானப் பெட்டிகளுடன் இயங்கும் இரயில்களை எம்.இ.எம்.யு.க்களுடன் மாற்றுவதும் பயணிகளுக்கு விரைவான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்திய இரயில்வே அதிகவேக திறன் கொண்ட வந்தே பாரத் இரயில்களை அறிமுகப்படுத்துகிறது. ஆகஸ்ட் 3, 2023 வரை, 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
01.08.2023 நிலவரப்படி, மொத்தம் 59,524 கி.மீ தொலைவிலான அகல இரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது
இவ்வாறு,மத்திய இரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.