நாட்டின் 76-வது குடியரசு தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். பிரதமர் பங்கேற்பதை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, துணை இராணுவப் படையின் முழு கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டும் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, துணை இராணுவப் படையின் தீவிரக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், டெல்லி காவல்படையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த துணை இராணுவப் படையின் முக்கிய அதிகாரிகள், கடந்த 27 மற்றும் 29 ம் தேதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். அப்போது, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, குறைபாடுகளைச் சரி செய்து தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பும்படி டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாகக் கூறப்பட்ட இடங்களில், ஆய்வு நடத்திய டெல்லி காவல் ஆணையர் சஞ்சய், குளறுபடிகளைச் சரிசெய்தார்.
மேலும், மகாத்மா காந்தி சமாதி அமைந்திருக்கும் ராஜ்காட், பிரதமர் தேசிய கொடியேற்ற உள்ள செங்கோட்டை உட்பட முக்கிய பகுதிகளில் 144 தடை விதித்தார். இப்பகுதிகளில் எவ்வித கூட்டம் நடத்தவும், ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.