இந்திய ஹாக்கி அணி அசத்தல் வெற்றி.
May 28, 2025, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய ஹாக்கி அணி அசத்தல் வெற்றி.

4-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது!

Web Desk by Web Desk
Aug 13, 2023, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் மலேசியா நாட்டின் அணியை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

2023-ம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் தமிழகத்தின் சென்னை இராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா ஆகிய அணிகள் களமிறங்கின. லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அரையிறுதியில் வெற்றிபெற்று, இந்தியா, மலேசியா அணிகள் இறுதிக்குப் போட்டிக்கு முன்னேறின.

நேற்று இரவு இறுதிப் போட்டிக்கள் நடந்தது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார். இப்போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. ஜுக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். வெற்றி பெற்ற இந்திய அணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆசிய சாம்பியன் கோப்பையில் அற்புதமான வெற்றியைப் பெற்றிருக்கும் நமது ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்! இது இந்திய ஹாக்கி அணியின் 4-வது வெற்றி. இது நமது விளையாட்டு வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்கள் எதிர் வரும் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Congratulations to our Men's Hockey Team on the spectacular victory in the Asian Championship! This is India's 4th triumph and it showcases the tireless dedication, rigorous training and unyielding determination of our players. Their extraordinary performance has ignited immense… pic.twitter.com/JRY2MSDx7Y

— Narendra Modi (@narendramodi) August 12, 2023

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில், “ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை 4-வது முறையாக பெற்று சாதனைப் படைத்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கடினமான உழைப்புடன் கூடிய கனவு மூலம் வெற்றி பெற்றுத் தரும் என இந்தியாவிற்கு நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

My heartfelt congratulations to the Men's Hockey Team of India on winning the Asian Champions Trophy for the record 4th time.

They have proven the power of India's dreams and the resilience of its grit paving the path of glory to be trodden by their followers. pic.twitter.com/jccxtjMF6h

— Amit Shah (@AmitShah) August 12, 2023

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ட்விட்டர் பக்கத்தில், “ஆசிய சாம்பியன் ஷிப் கோப்பையை 4-வது முறையாக கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுக்கள். ஒவ்வொரு நொடித் துளியும், ஒவ்வொரு இலக்கும், ஒவ்வொரு கணமும் நமது தேசத்தின் உணர்வை நீங்கள் வெளிப்படுத்தியது எங்களுக்கு தெரிந்தது. எங்கள் ஹாக்கி வீரர்களுக்கு பெருமை! மலேசியாவுக்கு எதிரான வெற்றி தேசத்தையே பெருமையில் ஆழ்த்தியது” என்று தெரிவித்துள்ளார்.

🏑Kudos to #TeamIndia for clinching the Asian Championship trophy for the 4th.

Every dribble, every goal, every moment showcased the spirit of our nation. Proud of our hockey warriors!

🏆 A stellar performance against Malaysia that made the nation beam with pride.… pic.twitter.com/2fwY86G7Mr

— Anurag Thakur (@ianuragthakur) August 12, 2023

Tags: HockeyIndiaAsia CupHockey IndiaHockey-tasticAsia Cup Hockey
ShareTweetSendShare
Previous Post

2047-க்கு முன் இந்தியா வளர்ச்சி அடையும்- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் திட்டவட்டம்

Next Post

நாளை பிரிவினை பயங்கரவாத நினைவுதினம்: உ.பி. அரசு அழைப்பு!

Related News

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

வான்வெளியில் புதிய சகாப்தம் : 5ம் தலைமுறை போர் விமானம் தயாரிப்பை தொடங்கிய இந்தியா!

முர்ஷிதாபாத் வன்முறை : முன்நின்று நடத்திய திரிணாமுல் – வசமாய் சிக்கும் மம்தா பானர்ஜி!

பின்னணி காரணம் என்ன? : அமெரிக்காவில் ஐ-போன் உற்பத்தி செய்யாத ஆப்பிள்!

பெரும் பொருளாதார சீரழிவு : பஞ்சத்தை நோக்கி பயணிக்கும் வங்கதேசம்!

சின்னாபின்னமாக நூர் கான் விமானத்தளம் : வெளியான புதிய செயற்கைக்கோள் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தெய்வச்செயலை ஏன் பாதுகாக்கிறது திமுக?- இபிஎஸ் கேள்வி!

தென் மாவட்ட மக்களுக்கு திமுக அரசு சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வு வினாத்தாள் கசிவு : தேர்வு ஒத்திவைப்பு!

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!

பயங்கரவாதத்தால் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஸ்லோவேனியா நன்கு அறிந்துள்ளது : கனிமொழி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி?

பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி, வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது : ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சீக்கியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies