ஆகஸ்ட் 14-ம் தேதியை, பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுசரிக்க, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்திருக்கிறார்.
நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு, 1940-ம் ஆண்டு பாகிஸ்தான் தனி நாடு தீர்மானத்தை லாகூரில் நிறைவேற்றியது முஸ்லீம் லீக். மேலும், பாகிஸ்தான் தனி நாடு பிரிவினைக்குப் பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக இருந்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குதற்கும் பிரிட்டன் அரசு அமைச்சர்கள் அடங்கிய குழுவை அனுப்பியது. ஆனால், இக்குழுவில் இருந்து விலகிய முஸ்லீம், நாடு முழுவதும் கலவரத்தை தூண்டி விட்டது.
இக்கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது மேற்குவங்க மாவட்டம் தான். நவக்காளி என்கிற இடத்தில் வெடித்த பெரும் கலவரம் பீகார், உத்தரப் பிரதேசம் வரை பரவியது. இக்கலவரத்தல் 4,000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். இது பிற்காலத்தில் கொல்கத்தா கொடுங்கொலைகள் என்று சரித்திரத்தில் பதிந்து விட்டது. இதன் பிறகு, 1947 ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் தனி நாடு பிரிந்து, அந்நாட்டிற்கு சுதந்திரமும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆகஸ்ட் 14-ம் தேதியை பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுஷ்டிக்குமாறு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இதையொட்டி, இளைய சமுதாயத்தினருக்கு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், பிரிவினை ஏற்பட்டபோது நிகழ்த்தப்பட்ட கலவரங்கள், வன்முறை தொடர்பான காட்சிகள் அடங்கிய கண்காட்சிகள், திரைப்படக் காட்சிகள் மற்றும் புத்தகக் காட்சிகளை, மாநிலத்தின் 75 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், பிரிவினையின்போது உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில், பிரிவினையின்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு பிரிவினையின்போது தாங்கள் அனுபவித்த துன்பங்களை பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில், பிரவினை குறித்த ஆவணப்படங்களை திரையிட்டு இளைய சமுதாயத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு, இந்திய சிந்தி கவுன்சில், உத்தரப் பிரதேச சிந்தி சபா, சிந்தி அகாடமி, சனாதானி பஞ்சாபி மகாசபா உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளுக்கும் மாநில அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.