டெல்லியில் பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி!
Sep 10, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 13, 2023, 12:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

75-வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு, டெல்லியில் பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணியை மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி இன்று காலை தொடங்கி வைத்தார்.

நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதையொட்டி, 75-வது நிறைவு விழாவை அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடியேற்றுமாறு, நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், தேசியக்கொடி ஏற்றிய புகைப்படங்களை ஹர் ஹர் திரங்கா https://harghartiranga.com/ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மக்கள் இன்று காலையிலேயே தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றத் தொடங்கினர். இவர்களில் பலரும் கொடியேற்றிய புகைப்படங்களை ஹர் ஹர் திரங்கா இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி தொடங்கியது. இப்பேரணியை மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி, கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர், “சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. இதை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் கூறியது போல, அமிர்தப் பெருவிழா தொடங்குகிறது. இந்த காலக்கட்டத்தில் நாம் நமது தேசத்தை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாகும். மேலும், இது ஒன்று மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆற்றல் நிரம்பிய இத்திசையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போது, அது நிச்சயம் நடந்தே தீரும்” என்று கூறினார்.

 

Har Ghar Tiranga, Ghar Ghar Tiranga 🇮🇳

Glimpses from today’s #HarGharTiranga MP Run in New Delhi. pic.twitter.com/ybQGkOylDn

— Meenakashi Lekhi (@M_Lekhi) August 13, 2023

Tags: har ghar tirangaMeenakashi LekhiMinister Meenakashi LekhiGhar Ghar TirangaMp Meenakashi Lekhi
Share
Tweet
SendShare
Previous Post

நாளை பிரிவினை பயங்கரவாத நினைவுதினம்: உ.பி. அரசு அழைப்பு!

Next Post

ஏர் இந்தியா லோகோ மாற்றம்!

Related News

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies