இந்தியாவில் மிகவும் பிரபலமான விமான நிறுவனமான ஏர் இந்தியா, தனது லோகோவை மாற்றி இருக்கிறது.
டாடா குழுமத்தின் பிரபல விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா, சமீபத்தில் “தி விஸ்டா” என்ற புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. புதிய லோகோவானது, சாத்தியமான சாத்தியக்கூறுகள், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்திற்கான தைரியம் மற்றும் நம்பிக்கையான கண்ணோட்டத்தை குறிக்கிறது. என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
There’s a new window of possibilities rising in the sky.
Our new look reimagines the iconic Indian window, also part of our history, into a gold window frame, symbolising a “Window of Possibilities”.
The identity will begin rolling out by December 2023.#FlyAI #NewAirIndia pic.twitter.com/ibxtxTEWIY
— Air India (@airindia) August 10, 2023
இதுகுறித்து அந்நிறுனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இதன் மூலம் லோகோவை மட்டும் மாற்றவில்லை. இது ஒரு மிகப் பெரிய திட்டம். ஆனால், நாங்கள் ஏர் இந்தியா முன்னேறத்தில் உறுதியாக இருக்கிறோம். எங்களுடைய வெற்றிப் பயணம் எங்களுக்கானது மட்டுமல்ல, இந்திய நாட்டிற்குமானது. இந்த தொலைநோக்கு பாய்ச்சல், அதன் கடற்படையில் புரட்சியை ஏற்படுத்த லட்சியத் திட்டத்துடன் கைகோர்க்க உள்ளோம்.” என்று தெரிவித்திருக்கிறார்.