சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் உள்ள முகப்புப் படங்களை மாற்றி, தேசியக்கொடியை வைக்குமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்று, 76-ம் ஆணடு தொடங்குகிறது. இதை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைநகர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதையொட்டி, டெல்லி செங்கோட்டை, ராஜ்கோட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடும்படி, நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். இதையொட்டி, வீடுதோறும் தேசியக் கொடியேற்றும்படியும், அவ்வாறு கொடியேற்றிய புகைப்படங்களை ஹர் ஹர் திரங்கா இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யும்மாறும், நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதவில், “சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்திற்காக, தங்களது சமூக வலைத்தளங்களில் இருக்கும் முகப்புப் படத்தை மாற்றி, தேசியக்கொடியை வைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருப்பதோடு, “நமது நாட்டுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பை பறைசாற்றும் வகையில், இத்தனித்துவமான முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.