உலகில் இடது கை பழக்கம் உள்ளவர்களின் வேறுபாடுகள் மற்றும் தனித்துவத்தை அங்கீகரிக்க சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 கொண்டாடப்படுகிறது.
உலகில் பெரும்பான்மையான மக்களைப் போலல்லாமல், இடது கை பழக்கம் உள்ளவர்களை அங்கீகரிப்பதற்காக இது ஒரு வழியாகும். உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10-12 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்கள் என்பது தெரியவருகிறது. ஆகவே, இடது கைப்பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 1976-ம் ஆண்டு முதன்முதலில் இடது கை பழக்கம் உடையவர்கள் தினத்தை அனுசரித்தவர் Left-Handers International Inc-ன் நிறுவனர் டீன் ஆர் கேம்ப்பெல்.
வலது கை பயன்படுத்தும் போது இடப்பக்க மூளை வேலை செய்யும். அதுவே, இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது மூளை வேலை செய்யும். இதனால் சாதாரணமாக வலது கை பழக்கம் உள்ளவர்களை விட இடது கை பழக்கம் உள்ளவர்கள், தாங்கள் செய்யும் வேளையில் நேர்த்தியுடன் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார் டீன் ஆர் கேம்ப்பெல்.
உலகில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் பில் கேட்ஸ் இடது கை பழக்கம் உள்ளவர். அதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இடது கை பழக்கம் உள்ளவர். என்பது குறிப்பிடத்தக்கது.