இளைஞர்களை மூளை சலவைச் செய்து நாட்டில் மதமோதலை உருவாக்குவதாக குற்றம் சாட்டில் “சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்” மூலம் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புத் தடை செய்யப்பட்டது. அந்த அமைப்பின் சந்தேகத்துக்குரிய நிர்வாகிகளைத் தேசிய புலனாய்வு முகமை (NIA) தொடர்ந்து சோதனைச் செய்து கைது செய்து வருகிறது.
அதனொரு பகுதியாக, கேரளா மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரியில் உள்ள கிரீன்வேலி அகாடமியை என்ஐஏ அதிகாரிகள் 2 வாரங்களுக்கு முன்பு முடக்கினர். அந்த அகாடமி பிஎப்ஐ அமைப்பின் ஆயுதப் பயிற்சி மையங்களில் ஒன்றாக இது செயல்பட்டு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என என்ஐஏ தெரிவித்தது.
MULTI-STATE RAIDS LEAD TO SEIZURE OF INCRIMINATING MATERIAL BY NIA IN PFI CONSPIRACY CASE pic.twitter.com/V7cg6vR3US
— NIA India (@NIA_India) August 13, 2023
இந்நிலையில், கிரீன்வேலி அகாடமி உடன் தொடர்புடைய கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் பிஹார் ஆகிய 5 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நேற்று ஒரே நேரத்தில் கண்ணூர், மலப்புரம், தட்சின கன்னடா, நாசிக், கொல்ஹாபூர், முர்ஷிதாபாத் மற்றும் கதிகர் ஆகிய மாவட்டங்களில் 14 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.