5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம்.
Oct 16, 2026, 09:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம்.

Murugesan M by Murugesan M
Aug 17, 2023, 11:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆண்டு இறுதியில் இராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வருவதால் இந்த சட்டமன்ற தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.

இந்த 5 மாநிலங்களில் மத்தியபிரதேசத்தில் மட்டும் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ் அரசையும், தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். ஆட்சியையும் அகற்ற தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் செய்யப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில், கட்சி பலவீனமாக இருக்கும் இடங்களில் அதிக கவனம் செலுத்துவது, வலுவான வேட்பாளர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூடும். ஆனால் 5 மாநில தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கூட்டத்தை முன்கூட்டியே நடத்த கட்சி தலைமை முடிவு செய்ததாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: PM Modipm narendra modiModi Meeting
Share
Tweet
SendShare
Previous Post

குஜராத்தில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 3,260 கன அடியாக அதிகரித்தது.

Related News

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies