குஜராத்தின் காந்திநகரில் ஜி20 மாநாடு, 2023 ஆகஸ்ட் 17 முதல் 19 வரை நடைபெறுகிறது.
ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில், சுகாதாரத்தில் அவசரநிலைகள் ஏற்படுவதைத் தடுத்தல், தயார்நிலை மற்றும் சிகிச்சை, மாற்று நுண்ணுயிர் எதிர்ப்பு, ஒரே சுகாதார கட்டமைப்பு என்ற மூன்று முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17 அன்று ஜி20 பிரதிநிதிகள் கூட்டமும், ஆகஸ்ட் 18 – 19 தேதிகளில் ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டமும் நடைபெறுகிறது. இது தவிர, ஒரே பூமி, ஒரே சுகாதாரம் – மேம்பட்ட சுகாதார கவனிப்பு- இந்தியா 2023 உள்ளிட்ட நான்கு துணை நிகழ்வுகள் இடம்பெறுகிறது. உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலகளாவிய உச்சி மாநாடு; இந்தியா மருத்துவ தொழில்நுட்பக் கண்காட்சி-2023, ‘தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த மாநாடு ஆகியவையும் நடைபெறுகிறது.
ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் மைய நிகழ்வாக ஆகஸ்ட் 19அன்று நிதி – சுகாதார அமைச்சர்களின் கூட்டுக் கூட்டமும் நடைபெறுகிறது.
காந்திநகரில் நடைபெறும் 4-வது சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் 19 ஜி 20 உறுப்பு நாடுகள், 10 அழைப்பு நாடுகள் மற்றும் 22 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
‘விருந்தினர்களே கடவுள்கள்’ என்ற இந்திய தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் குஜராத் கலாச்சாரத்தின் சுவைகள் நிறைந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.